திருவிளக்கு பூஜை
திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டும், திருமணம் ஆன பெண்கள் தங்களுக்கு தாலிபாக்கியம் நிலைக்க வேண்டும் என விளக்கு ஏற்றி பூஜைகள் செய்து பெண்களால் நடத்தப்படும் பூஜை திருவிளக்கு பூஜை. இந்த பூஜை ஸ்ரீசுடலைஆண்டவர் கோயில் கொடை விழாவின் மூன்றாம் நாளில் நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் ஆயிரம் பேர்களுக்கு மேல் கலந்து கொள்கின்றனர்.
பால்குடம்
நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் நோய், கஷ்டங்கள் தீரவும் வாழ்வு வளம் பெறவும் 21 நாட்கள் முதல் 41 நாட்கள் வரை கடும் விரதம் இருந்து சிறிய குடங்களில் பாலை நிரப்பி குடத்தின் வாய் பகுதியை தேங்காயாலும், மஞ்சள் துணியாலும் மூடி அதை தலையில் சுமந்து ஊர்வலம் ஆக ஸ்ரீசுடலை ஆண்டவர் கோயிலுக்கு எடுத்து வந்து ஸ்ரீ சுடலை ஆண்டவருக்கு அதில் உள்ள பாலை அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடனை நிறை வேற்றுவது இந்த பால்குட ஊர்வலம்.
இந்த பால்குட ஊர்வலம் ஸ்ரீ சுடலை ஆண்டவர் கொடைவிழாவின் 5வது நாளில் சிறப்புடன் நடக்கிறது. பால்குடம் சுமந்து வருபவர்களுக்கு ஆராதனை வருவதும், அவர்கள் சுமந்து வரும் பால் நுரையுடன் குடத்தை விட்டு வெளியே பொங்கி வருவதும், இருப்பினும் கூட பாலின் அளவு குறையாமல் இருக்கும், ஸ்ரீ சுடலை ஆண்டவரின் வற்றாத அருளுக்கு இது ஒரு நேரடி சான்று ஆகும்.
பொங்கலிடுதல்
செல்வம் பொங்க வேண்டும், வாழ்வு பொங்க வேண்டும் என, பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி கோயில் முன்பு திரண்டு பானை வைத்து அதில் பச்சரிசி இட்டு , தீயிட்டு, சோறுபொங்கி வரும் நேரத்தில் குலவையும் இட்டு அதை ஸ்ரீ சுடலை ஆண்டவருக்கு படையல் இட்டு கொண்டாடி தங்களது நேர்த்திக் கடனை நிறை வேற்ற பொங்கல் இடுகிறார்கள். கோயில் கொடை விழாவின் ஏழாவது நாளில் விழா நிறைவு நிகழ்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் இடுகிறார்கள்
ஸ்ரீசுடலைஆண்டவர் கோவிலில் சித்திரை 1-ம் தேதி சிறப்பு பூஜை
ஸ்ரீசுடலைஆண்டவர் கோவிலில் ஆனி மாதம் - வருஷாபிஷேகம்
(17-06-2018)
ஸ்ரீ மன்னராஜா கோவிலில் கோவிலில் ஆனி மாதம் - வருஷாபிஷேகம்
(07-07-2018)
ஸ்ரீ மன்னராஜா கோவிலில் ஆனி மாதம் 29-ம் தேதி வெள்ளிக் கிழமை
(13-07-2018) கொடைவிழா
ஸ்ரீசுடலைஆண்டவர் கோவில் ஆவணி பெரும் கொடைவிழா 19-08-2018 முதல் 24-08-2018 வரை.
கார்த்திகைப் பெருக்கு விழா
தை 1-ம் தேதி சிறப்பு பூஜை